Posts

வாஸ்து முறைப்படி இவ்வாறு செய்வதால் பணக்காரராக முடியுமா...?

Image
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.  உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க  வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம்  சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்.  உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட மண் பானை ஒன்றை வையுங்கள். இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்...

வாஸ்து தோஷங்கள் யாவும் விலகச் செய்யும் சங்கு!!

Image
பாற்கடலை கடையும்போது ஸ்ரீ மகாலட்சுமியுடன் வலம்புரி சங்கு தோன்றியதாக கூறப்படுகிறது. இதனுடன் முத்து, பவளம் போன்ற பொருட்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால். சங்கு இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் தீயச் செயல் எதுவுமே  பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும். சங்கால் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும். வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால்,  மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு ப...

வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...?

Image
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் செடி,கொடிகள் சார்ந்த தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட செடிகளையும் மரங்களையும் ஆராய்ந்து நமது முன்னோர்கள் வாஸ்து சாஸ்திர வழியாக வழங்கியுள்ளனர். வீட்டில் வளர்க்க கூடிய மரங்கள் வகைகளைப்பற்றி பார்ப்போம். வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடிவகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக வளர்க்கலாம். பிரம்மதண்டு மற்றும் எருக்கம் செடி அது எந்தவகையாக இருந்தாலும் வேண்டாம். சிலர் செயற்கை கற்றாழை வளர்பார்கள். அதுவும் வாஸ்து ரீதியாக தவறு ஆகும். மரவகைகளில் முக்கியமாக வளர்க்க கூடாது என்று சொன்னால் அகத்தி மரம், முருங்கை மரம், பனைமரம், பாலமரங்கள், மகிழமரம், புளியமரம், அரசமரம், ஆலமரம், செண்பகமரம் போன்றவை ஆகும். இதேபோல் கொடிவகைகளில் பேய்பீர்கன், அவரைசெடிகளும், பாகற்செடிகளும் எக்காரணம் கொண்டும் வீட்டில் வளர்க்க கூடாது. முள்உள்ள செடிகளையும், மர...

வாஸ்து : வருமானம் தரும் வடக்கு ஜன்னல்

Image
ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம்.  வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது.    வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள்.    குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன என பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான் முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு.    குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர் பத்மநிதி. நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தி...

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

Image
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.   இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.    ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.     இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.    நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.    கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந...

பணப் பற்றாக்குறை போக்கவும் வாஸ்து இருக்கிறதா...!

Image
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற  உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால்  சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.  உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் ...

வாஸ்து : பணப் பற்றாகுறையை போக்க எளிய வழி

Image
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.  பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம்  வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர  பணம் ஆகர்ஷணமாகும்.  உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுத...