Posts

Showing posts from October, 2017

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!

Image
தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.  வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும். வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு  பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும். தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது. எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது. வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி  குறைபாடு ஏற்படலாம். சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது  பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப...

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

Image
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.  இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள். ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன. நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை. வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள்...

வாஸ்து படி எந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்?

Image
ஒரு சிலர் மனையின் முன் பக்கம் அதிகளவில் காலியிடம் விட்டு பின் பகுதி முழுவதும் கட்டிடம் எழுப்புகின்றனர். ஆனால், சிலர் மனையைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி அதில் இருந்து 4 பக்கமும் குறிப்பிட்ட அளவு காலியிடம் விட்டு நடுவில் கட்டிடம் எழுப்புகின்றனர். இதுபோல் பல வழிமுறை மக்களிடையே பின்பற்றப்படுகிறது. வாஸ்துவில் இதுகுறித்து என்ன கூறப்பட்டுள்ளது? எந்த முறையில் கட்டிடம் அமைப்பது சிறப்பாக இருக்கும்?  பதில்: அறிவியல் பூர்வமாக வீட்டைச் சுற்றி (வலம் வரும் அளவுக்கு) சிறிதளவு இடம் விட்டு கட்டிடத்தை எழுப்பினால், வீட்டுக்குள் அதிகளவு காற்று வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். தூய பிராணவாயு அதிகம் கிடைக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தே கட்டிடம் அமையும் என்பது ஜோதிட விதி. ஜாதகத்தில் 4ஆம் இடம் கட்டிட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் கட்டிடக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடமும், சுக்கிரனும் சிறப்பாக அமைந்திருந்தால் தோட்டத்துடன் கூடிய வீடு, தோப்புக்கு மத்தியில் அமைந்த வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிர...

வாஸ்து படி கட்டிடத்திற்கு எந்த வகையான வர்ணம் (Colour) பூசலாம்

Image
ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு குறிப்பிட்ட வர்ணம் (Colour) பூசுவதால் வசிக்கும் நமக்கும் பார்க்கும் நபர்களுக்கும் ஒரு வித சாந்தமான நல்ல மனநிலையை கொடுக்கிறது. ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதி மற்றும் உள் அறையின் சுவற்றில் கீழ்க்கண்ட வர்ணங்களை பூசலாம்.  * ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுவற்றிற்கு White or Light Yellow Colour பூச வேண்டும். * ஒரு கட்டிடத்தில் உள்ள Hall - ன் உள் சுவற்றிற்கு Off White Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு Light Blue Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள சமையலறையின் உள் சுவற்றிற்கு Light Orange Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு Light Green Colour பூச வேண்டும்

வாஸ்து : மாடிப்படி அமைக்க சிறந்த இடம் மற்றும் அமைக்கும் முறை

Image
ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.   ஒரு இடத்தின் நல்ல செயல்பாடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிகட்டுகள் பெரும் பங்கு வகிக்கும். ஒரு இடதிற்கு உட்புறமாகவும் மற்றும் வெளிப்புறமாகவும் படிக்கட்டினை அமைக்கலாம் அவை வரக்கூடிய இடங்கள்.  ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது. ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" (Cantilever) முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Image
ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.  ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.

வாஸ்துபடி தியானம் செய்ய சிறந்த இடம்

Image
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும்.  அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். மேலும், தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை. இவ்வாறு தியானம் செய்வதற்க்கு அமைதியான சூழல், சுத்தமான காற்று என்பன முக்கியம். அதேபோல் தியானம் செய்ய வாஸ்து படி சிறந்த இடம் ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை ஆகும். அந்த வடகிழக்கு அறையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருப்பது மிகவும் நல்லது.

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

Image
இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.   எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள். ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் . இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும். இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது. மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்? : வாஸ்து

Image
வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்? ஆனால் வேறு சிலர் குறிப்பிட்ட திசையில் இடம் காலியாக இருந்தால்தான் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்? வீட்டில் காலியிடம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?  பதில்: பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது. தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்.

ஐயப்பனும் வாஸ்து பரிகாரமும்

Image
ஐயப்ப சீஸன் வரப்போகிறது. ஆனால், இந்தக் கட்டுரை சீஸனுக்காக எழுதப்படுவது அல்ல. சில உண்மைகளை நமது வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது.  ஐயப்பசுவாமி சக்தி மிகுந்தவரா இல்லையா என்பதை விட, மாலைபோட்டு இருமுடிகட்டி சபரிமலையில் ஏறுவதால் பலன் கிடைக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம். நமது புராணங்களிலும் எகிப்திய புராணங்களிலும் ஏரளமான குறியீட்டுக் கடவுள்கள் உண்டு. வாரியார், புலவர் கீரன் தொடங்கி இன்றைய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் வரை இந்த குறியீட்டுக் கடவுள்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். ஆனால்,மகாபாரதத்தில் அரவான் என்ற பாத்திரம் ஏன் வருகிறது? எதற்காக அவனை பலியிடவேண்டும்? பாண்டவர்களின் வெற்றிக்கு பகவான் கிருஷ்ணன் இருக்கையில் அரவானின் மரணம் எதற்காக தேவைப்படுகிறது? சர்வ லட்சணமும் பொருந்திய அரவான் தனது கடைசி ஆசையாக ஒரு பெண்ணைக் கேட்கையில் கிருஷ்ணர் ஏன் பெண் அவதாரம் எடுத்து வரவேண்டும், கிருஷ்ண பகவானுக்கு ஒரு பெண் பிள்ளையை பிடித்துவரத் தெரியாதா... இது போன்ற கேள்விகளை நமது ஆன்மீகப் பேச்சாளர்கள் எழுப்புவது இல்லை. வில்வீரனான அர்ச்சுனன், பிருஹன்னளை என்ற பெண்வேடம் பூண்டு மறைந்...

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Image
ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

Image
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம். இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள். ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன. நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.  வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள...

வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!

Image
பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.  ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும். பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும். பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

Image
வீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். கடன் தொல்லை கூடும். மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிக்கிறது. அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம். ஈசான்யத்தில் நீர் ஆதாரம் இருந்தாலே போதும். சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட ஒன்றை நாமும் விலக்குவது நல்லது. வீட்டு முகப்பில் மணி பிளாண்ட்கொடியை போல படரவிட்டால் அந்த வீட்டில் தீயசக்திகள் நடமாட்டம் கூடும். வாழ்க்கையில் அலுவலகம், குடும்பத்தில் ஒத்துப்போவதை போல இயற்கை யோடு ஒத்துப்போவதே வாஸ்து ஆகும். வீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்குமேல் சிலைகளும் வைக்கக்கூடாது. கடைகளுக்கான வியாபாரமனை வாஸ்துப்படி சதுரமாகவோ நீள் சதுரமாகவோ அமையலாம். வடக்கு கிழக்கு அதிகாமான இடம் விட வேண்டும். கடையில் பூஜை ச...