Posts

Showing posts from August, 2018

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

Image
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.   இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.    ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.     இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.    நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.    கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந...

பணப் பற்றாக்குறை போக்கவும் வாஸ்து இருக்கிறதா...!

Image
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற  உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால்  சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.  உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் ...

வாஸ்து : பணப் பற்றாகுறையை போக்க எளிய வழி

Image
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.  பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம்  வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர  பணம் ஆகர்ஷணமாகும்.  உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுத...

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு என்பதை அறிவோம்...

Image
வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை,  நான்கு திசைகள்:    • வடக்கு • கிழக்கு • தெற்கு • மேற்கு  நான்கு மூலைகள்:   • வடகிழக்கு மூலை • தென்கிழக்கு மூலை • தென்மேற்கு மூலை • வடமேற்கு மூலை  வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும்(அக்னி மூலை).     தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை / கன்னி மூலை) மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும் (வாயு மூலை)      இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ / தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும். 

வாகனம் நிறுத்தும் இடத்தை எப்படி அமைப்பது? - வாஸ்து அறிவுரைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும். * ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.   * ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.  *  ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது.     * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம்.   * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது.  * ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும...

வாஸ்து படி மதிற்சுவர் எப்படி அமைக்க வேண்டும்?

Image
வாஸ்து சாஸ்திரப்படி நமது வீட்டின் மதிற்சுவரை எப்படி அமைக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு இடத்திற்கும் அந்த இடத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் வேலியாவது அமைக்கவேண்டும். மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது. மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள். ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும். கட்டப்படும் கட்டிடம் அடையாள குறியிட்ட மதிற்சுவரின் மூலையிலிருந்து 90 டிகிரி மூலைமட்டம் வரும்படி கட்டடம் கட்ட வேண்டும். ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் மதிற்சுவர் அமைக்க வேண்டும்.தாய்சுவருக்கும், மதிற்சுவருக்கும் இடையே உள்ள காலியிடம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் மதிற்சுவருக்கும், கட்டடத்தின் தாய்சுவருக்கும் இடையே அமைக்கப்ப...

வற்றாத செல்வம் பெற வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள்!

Image
தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.  வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.  வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு  பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.  தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.  எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.  வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி  குறைபாடு ஏற்படலாம்.  சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது  பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்க...